காத்தான்குடியில் கிராம சேவை உத்தியோகத்தர்ள் கெளரவிப்பு.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி-01 167 ,167 E ஆகிய கிராம சேவகர் பிரிவில் கடந்த 5 வருடங்களாக சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் கிராம உத்தியோகத்தர்களான திருமதி .அஸீஸா மஹ்சூம், ஏ.ஜீ.ஏ.ரஸாக் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (30) மஸ்ஜிதுல் ஹுஸைனிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
மஸ்ஜிதுல் ஹுஸைனிய்யா பள்ளிவாயலின் உப தலைவர் எஸ்.ஏ.கே.பளீளுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மவ்ஜூத் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மீரா ஜும் ஆ பள்ளிவாயல் உப தலைவர் ஆர்.ஏ.வஹாப் , கிராம உத்தியோகர்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜறூப் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி ஷியாதா மின்ஹாஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், பொதுமக்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி நன்றியுடன் கெளரவித்தனர்.