உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஜனவரிக்கு ஒத்திவைப்பு – பாடசாலைகள் டிசம்பர் 16 முதல் மீண்டும் திறப்பு.!!!

நாட்டில் ஏற்பட்ட “டிட்வா” சூறாவளியின் பாதிப்புகள் காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சூறாவளியால் பாதிக்கப்படாத ஏனைய பாடங்களுக்கான பரீட்சைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள் திறப்பு:

பாடசாலைகள்: அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.

பல்கலைக்கழகங்கள்: வெள்ளத்தால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் டிசம்பர் 08ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும்.

பரீட்சை ஒத்திவைப்பு, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டு வரவும், பரீட்சைக்குத் தயாராவதற்கும் போதுமான அவகாசத்தை அளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709306

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time