உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இலங்கை தபால் திணைக்களத்தில் 36 புதிய சாரதிகள் நியமனம் – நாளை நியமனக் கடிதங்கள்.!!!

(எம்.ஐ.எம். கமால்தீன்)

இலங்கை தபால் திணைக்களத்தில் தபால் சாரதி (திறந்த) – தரம் III பதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 36 பேருக்கு நியமனக் கடிதங்கள் நாளை (18) வழங்கப்படவுள்ளன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், நாளை பிற்பகல் 2.00 மணிக்கு நாரஹேன்பிட்டி அரசாங்க செய்தித் துறையின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெறும்.

இதற்காக கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க மொத்தம் 1500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தபால் திணைக்களத்துக்கு கிடைத்திருந்தன. பின்னர் விண்ணப்பதாரர்கள் செய்முறைத் தேர்வு மற்றும் பொது நேர்முகத் தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, தகுதிகளை பூர்த்தி செய்த 36 பேர் இறுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய தபால் சாரதிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் 2025 நவம்பர் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். மேலும் நவம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டதன் பின், அவர்கள் தபால் போக்குவரத்துச் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

தற்போது இலங்கை அஞ்சல் துறையின் கீழ் சுமார் 129 தபால் சாரதிகள் பணியாற்றி வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709339

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time