உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இனவாதத்தைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் மாதிரி கடும் சட்டம் தேவை — ஜனாதிபதியிடம் றிஷாட் வலியுறுத்தல்.!!!

அரசாங்கத்தினால் இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு ‘இலங்கையர் தினம்’ எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13,14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்வு பற்றிய சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டை குழப்பும் சக்திகளால் தான் இந்நாடு இன்னும் பொருளாதார வீழ்ச்சியை கண்டிருக்கின்றது. இலங்கை சுதந்திரமடையும் போது தனிநபர் வருமானம் 48 டொலர், ஆனால் அன்று ஜப்பானின் தனிநபர் வருமானம் 49 டொலர், ஆகவே ஜப்பானை விட ஒரு டொலர் வித்தியாசத்தில் தான் அன்று இருந்தோம், இலங்கையையும் ஜப்பானையும் ஒப்பிடும் நாம் இன்னும் பொருளாதார வீழ்ச்சியைதான் சந்தித்திருக்கின்றோம், நமது நாடு இனவாதத்தினால் தான் குட்டிச்சுவராகி அதள பாதாளத்திற்குச் சென்றிருக்கின்றது.

ஆகவே, இனவாதம் மதவாத்தை பேசும் எந்த நபராக இருந்தாலும் அவருக்கு எதிரான சட்டத்தை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் இருப்பது போன்ற ஓர் சட்ட மாற்றத்தை நாம் அவசரமாக கொண்டுவர வேண்டும், அதற்கு நாம் பூரண ஆதரவுகளை வழங்குவோம்.

அத்துடன் முஸ்லிம், தமிழ், சிங்கள மற்றும் கத்தோலிக்க என ஒவ்வொரு மார்க்கத்திற்கான சந்தேகங்களை தீர்ப்பதற்கு அல்லது தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ’இலங்கையர் தினம்’ நாளில் மேற்கொள்ள அந்தந்த இன ரீதியான தினைக்களங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இக்கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், ஹிஸ்புல்லாஹ், மனோ கனேசன், செல்வம் அடைக்கலநாதன், ரவீகரன், மஸ்தான், திகாம்பரம், வைத்தியர் அர்ச்சுனா, மஸ்தான் மற்றும் சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709327

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time