உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

குப்பை திட்டத்துக்கு எதிராக; புத்தளம் மாநகர சபையின் உறுதியான தீர்மானம்.!!!

புத்தளம் – அருவக்காலு தின்மக் கழிவு செயற்திட்டத்திற்கு (Sanitary Landfill) எதிராக புத்தளம் மாநகர சபை உறுதியான தீர்மானம் ஒன்றை ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானம் ரனீஸ் பதுர்தீன் அவர்களால் முன்வைக்கப்பட்டு, நகரசபையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் நிறைவேற்றப்பட்டது.

Clean Puttalam இயக்கத்தை ஆரம்பித்த தலைவர் இஷாம் மரிக்கார், மற்றும் முன்னணி செயற்பாட்டாளர்களான இப்லால் அமீன், சித்தி சலீமா, முகமது ஷிபாக் ஆகியோர் தற்போது இந்த மாநகர சபையின் உறுப்பினர்களாக இருந்து, தங்கள் அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி மக்களின் நலனுக்காக ஒருமித்த நிலைப்பாட்டில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ரின்ஷாத் அவர்களும் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தார். எனினும், “இந்த திட்டம் விஞ்ஞான ரீதியாக பாதிப்பில்லாதது என நிரூபிக்கப்பட்டால், அதனை நிறுத்த முடியாது” என்பதையும் அவர் சபையில் குறிப்பிட்டார்.

இத்தீர்மானம், புத்தளம் மக்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான உறுதியான குரலாக அமைந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706063

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time