நோன்பை முன்னிட்டு: உணவகங்களில் விசேட சுகாதார கண்காணிப்பு தீவிரம்.!!!
-நூருல் ஹுதா உமர்-
கல்முனை பகுதியில் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் சுகாதாரத் தரத்தை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியாக விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறைகள், சமையல் சூழல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை ஆகியவை விரிவாக பரிசோதிக்கப்பட்டன.
மேலும், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத வர்த்தகர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
நோன்பு காலத்தில் உணவகங்களில் மக்கள் கூடுதல் அளவில் உணவு வாங்குவதால், உணவின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







