உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

போதைப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்துக்கு முற்றுப்புள்ளி – நீதி அமைச்சர் அறிவிப்பு.!!!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், யாரும் போதைப்பொருட்களை இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் போதைப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தை நிறுத்துவதற்கான தேசியத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

“போதைப்பொருள் விநியோகத்தை முற்றிலும் நிறுத்துவதே எங்கள் முதன்மை நோக்கம். போதைப்பொருள் கடத்தல் காரணமாக பாதாள உலகக் குழுக்கள் பெருமளவில் விரிவடைந்துள்ளன. குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகம் காணப்படுகிறது,” என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், நாட்டிற்குள் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்கவும், நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் ஒழிக்கவும் அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“போதைப்பொருள் இல்லாத நாடு” என்ற தலைப்பில் கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709400

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time