உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக – அஷ்ஷெய்க் கலாநிதி எம்.ரீ.எம்.ரிஸ்வி மஜீதி நியமனம்.!!!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் மார்க்கப் பிரசாரகருமான அஷ்ஷெய்க் கலாநிதி எம்.ரீ.எம்.ரிஸ்வி மஜீதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025.08.30ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய சபைக்கூட்டத்தில் எதிர்வரும் மூன்றாண்டுகளுக்கான (2025 2028) புதிய நிறைவேற்றுக்குழு தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் ஜம்இய்யாவின் தற்போதைய யாப்பு விதிகளில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் கடந்த 16-10-2025ம் திகதி கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.ரீ.எம்.ரிஸ்வி மஜீதி பரிந்துரைக்கப்பட்டு நிறைவேற்றுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தாங்களும் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவின் ஒர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளீர்கள். தாங்கள் நியமிக்கப்படும் இப்பொறுப்பானது ஓர் அமானிதமாகும் என்பதை மனத்தில் நிறுத்தி இந்நியமனத்தை ஏற்று, ஜம்இய்யாவின் யாப்பு மற்றும் மன்ஹஜ் ஆகியவற்றின் அடிப்படையில் ஜம்இய்யாவின் பணிகள் சிறப்பாக நடைபெற தாங்கள் பங்களிப்புச்செய்வீர்கள் என எதிர்பார்ப்பதாக ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709394

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time