உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

பாதாள உலக கும்பலின் சொத்துக்கள் பறிமுதல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.!!!

(கொழும்பு செய்தியாளர்)

பாதாள உலக கும்பலுக்குச் சொந்தமான சுமார் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பாதாள உலக கும்பலுக்குச் சொந்தமான சொத்துக்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என கூறினார்.

மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான 354 பவுண் தங்க நகைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தின் மூலம் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் 72 வாகனங்கள், 35 வீடுகள், 34 ஏக்கர் காணிகள் மற்றும் 67 கோடி ரூபா பணம் ஆகியவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709401

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time