வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கும் உதவி – 10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிப்பு.!!!
வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
”இடர் முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித் தொகையை வழங்குதற்காக 7.5 பில்லியன் ரூபா (750 கோடி ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை வரவு செலவுத் திட்டத்தில் அனர்த்த முகாமைத்துவத்திற்காக ஒதுக்கப்பட்ட 30 பில்லியன் ரூபாவில் இருந்து வழங்கப்படுவதாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட போது தெரிவித்தார்.
இதற்கான பொறிமுறை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தமது பிரதேச கிராம சேவகர்களுடன் தொடர்பு கொண்டு இந்த நிதியைப் பெற முடியும் என்றும் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.