புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக – ரசிக பீரிஸ் கடமையேற்பு.!!!
இலங்கையின் புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதனிடையே, முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) தனது பதவியிலிருந்தும், அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமன் ஸ்ரீ ரத்நாயக்க, கடந்த 34 ஆண்டுகளாக அரச சேவையில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. தனது நீண்டகால பணிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெறும் நிலையில், தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலத்தில் தன்னை ஆதரித்த அனைத்து மக்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி செயலாளர்கள், பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக பொறுப்பேற்ற ரசிக பீரிஸ் விரைவில் தனது அதிகாரப்பூர்வ பணிகளை முன்னெடுக்க உள்ளார்.





