உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில்; மோட்டார் வாகன புகை பரிசோதனை — வாகனப் புகை மாசுபாட்டைத் தடுக்க விழிப்புணர்வு செயலமர்வு.!!! 

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் திரு M. சோமசூரியம் தலைமையில், தலைமை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித் திட்ட செயலமர்வு இன்று (24) சிறப்பாக நடைபெற்றது.

இச்செயலமர்வு, தலைமை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள VET தொழில்நுட்ப உதவியாளர் திரு NMM. மர்சூக் அவர்களின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிகழ்வு, காலை மற்றும் நண்பகல் என இரண்டு அமர்வுகளாக இடம் பெற்றது.

காலை அமர்வுக்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் திரு JK. அழகப்பெரும, மோட்டார் வாகன பரிசோதகர் திரு KKNM. குணதிலக, நண்பகல் அமர்வுக்கு பிரதம அதிதிகளாக Chief Inspector திரு PPA. சரத் சந்திர (O.I.C Division Traffic), காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு AMR. நாளக்க அழககோன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் திரு P. அன்டன் தர்சாந், கல்லூரியின் HOD, Instructor, Visiting Instructor, Demonstrator உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வளிமண்டல மாசுபாட்டைத் தடுக்கும் அவசியம், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை முறைமை பற்றிய விரிவான விளக்கங்களை
திரு P. அன்டன் தர்சாந் மற்றும் திரு NMM. மர்சூக் வழங்கினர்.

செயலமர்வு நிறைவில், தலைமை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் VET பிரிவினால் வழங்கப்படும் மதிப்புமிக்க சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706037

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time