உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி நகரசபையின் உள்ளூராட்சி வார; இறுதி நாள் நிகழ்வில் – சாதனையாளர்கள் கெளரவிப்பு.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில், தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுத்து வரும் “மறுமலர்ச்சி நகரம் – உள்ளூராட்சி வாரம் 2025” நிகழ்வுகள், செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது. அதன் இறுதி நாள் நிகழ்வு இன்று (21) ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஆர்.எப்.றிப்கா ஷபீன் மற்றும் பிரதி நகரமுதல்வர் எம்.ஐ.எம். ஜெஸீம், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.சி.எம்.ஏ. சத்தார், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா தலைவர் எம்.ஐ. அப்துல் கபூர் மதனி ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

கெளரவ அதிதிகளாக காத்தான்குடி நகரசபை செயலாளர் றினோஸா முப்லிஹ், கணக்காளர் ஏ.எம். மனாசிர் அஹ்ஸன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், உலமாக்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மூன்று கட்டங்களாக இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வில் எழுச்சி கதிர் மலர் வெளியீடு, சாதனையாளர்கள் கௌரவிப்பு, பரிசளிப்பு நிகழ்வு என்பன இடம்பெற்றது, உள்ளூராட்சி வாரத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709458

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time