ஓட்டமாவடி – காவத்தமுனை இடைத்தங்கல் முகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை; அமைச்சர் ஹந்துனத்தி தலைமையிலான குழு பார்வையிட்டது.!!!
வெள்ளத்தால் இடம்பெயர்ந்து காவத்தமுனை இடைத்தங்கல் முகாமில் தங்கி வரும் குடும்பங்களின் நலன்களை பார்வையிடும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் அமைச்சரான சுனில் ஹந்துனத்தி நேற்று (29) விசேடமாக முகாமுக்கு விஜயம் மேற்கொண்டார்.
அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு. அருள் ராஜ், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எம். ஹலால்தீன் ஹாஜியார், பிரதேச செயலாளர் ஏ. தாஹிர், உறுப்பினர் ஏ.எல். லெத்திப் மௌலவி, கல்குடா உதவி பொலிஸ் அத்தியட்சகர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ. ரியாஸ் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ.சி.எம். நியாஸ் ஹாஜியார் ஆகியோரும் இணைந்து கலந்து கொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள், உடனடி தேவைகள் மற்றும் முகாமில் நிலவும் வசதிகள் அனைத்தும் குறித்து குழுவினர் விரிவாக ஆய்வு செய்தனர்.
முகாமில் தங்கியுள்ள மக்களின் பாதுகாப்பு, உணவு, சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க அமைச்சரால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.






