உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

சட்டத்தரணி மீது தாக்குதல் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.!!!

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

தகவலின்படி, சட்டத்தரணி ஒருவர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையை முடித்துவிட்டு, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்த தனது காரை இயக்க முற்பட்டுள்ளார்.

அந்தவேளையில் சிறைச்சாலை பஸ் ஒன்று நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தபோது, பஸ்ஸை நிறுத்துவதற்காக காரை அங்கிருந்து நகர்த்துமாறு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறின் போது, பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணியை தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709406

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time