காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு – விழிப்புணர்வு கருத்தரங்கு.!!!
(பி.எம். பயாஸ்)
காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை (13) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் முயற்சிகள், அனாதரவற்ற சிறுவர்களின் பராமரிப்பு தொடர்பான “சரோஜா வேலைத்திட்டம்”, மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.பி. ரத்னாயக்க அவர்களினால் விரிவான விளக்கங்களை வழங்கப்பட்டது.
சுற்றுச் சூழல் மற்றும் சிவில் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். ஜவாஹிர் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 167B சிவில் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


