உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி மத்திய கல்லூரியில் “தலசீமியா” நோய் தொடர்பான; விழிப்புணர்வு கருத்தரங்கு.!!!

காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் “தலசீமியா” நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நேற்று (09) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ரஹ்மத்துல்லாஹ் சிறப்புரையாற்றுகையில்,
எமது நாட்டில் தலசீமியா நோயாளர்கள் அதிகரித்து வருவதன் காரணமாக, சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமைய பாடசாலைகளில் தரம் 10 மாணவர்களை இலக்காகக் கொண்டு நோய்க்காவி அடையாளம் காணும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நோய் பரவல், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதற்கான பரிசோதனை முறைகள் குறித்த விரிவான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் தரம் 10 மாணவர்களுக்கான இரத்த பரிசோதனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709492

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time