பஹல கடுகன்னாவ மண்சரிவு — பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; மீட்பு பணிகள் நிறைவு.!!!
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட கொடூரமான மண்சரிவு அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் ஒரு நபரின் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், அனர்த்தத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அதேவேளை, சம்பவ இடத்தில் பல மணி நேரமாக முன்னெடுக்கப்பட்ட மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன என அப் பகுதியில் பணியாற்றிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.



