மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான்; மாகாண ஆணையாளராக பதவி ஏற்பு.!!!
(எஸ் ஜே புஹாது)
கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த எம் பி எம் சுபியான் இன்று (11) கடமையேற்றுக் கொண்டார்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான சட்டத்தரணி எம் பி எம் சுபியான் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விசேட துறையில் தனது பட்டப் படிப்பை முடித்து நீதி அமைச்சின் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தராக மூன்று வருடங்கள் கடமையாற்றி இலங்கை நிர்வாக சேவை பரிட்சையில் சித்தி அடைந்து அனுராதபுர மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக மூன்று வருடங்கள் கடமையாற்றி பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக நான்கு வருடங்கள் கடமையாற்றி உள்ளார்
பல தேர்தல்களை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடித்து தற்போது இந்தப் பதவி நிலைக்கு மாகாண ஆணையாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சட்டத்துறைக்குள்ளும் தனது கால் தடத்தை பதித்து ஒரு சட்டத்தரணியாகவும் திகழ்கின்ற இவர் தற்போது பொது நிர்வாக துறையில் முது கலைமானி பட்டத்தையும் தொடர்கிறார்.
