மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி வழக்கு – தொடர்புடைய அனைவரும் நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு.!!!
(காத்தான்குடி செய்தியாளர்)
மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை (27) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிபதியின் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள் எஸ்.எச்.எம். மனாறுதீன், முபாறக் முஅஸ்ஸம் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.
குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதங்கள் ஏற்பட்டிருப்பதை நீதிவான் குறிப்பிட்டதோடு, இவ்வழக்குடன் தொடர்புடைய அனைத்து பங்காளர்களும் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நீதிமன்றில் ஆஜராகி கலந்துரையாடி தெளிவான முடிவை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக வழக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ் எச் எம் மனாறுதீன் தெரிவித்தார்.
இந்நிலையில், குருக்கள்மடம் புதைகுழி வழக்கு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
