உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மத்திய வங்கி ஆளுநரால்; புதிய ரூ. 2000 நாணயத்தாள் – ஜனாதிபதியிடம் கையளிப்பு.!!!

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூ. 2000 நாணயத்தாள் இன்று (29) காலை வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 5ஆவது நாணயத்தாள் இதுவாகும்.

வளர்ச்சிக்கான அடித்தளமான பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் மத்திய வங்கியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், ‘செழிப்புக்கான ஸ்திரத்தன்மை’ எனும் ஆண்டு விழா கருப்பொருளின் கீழ் இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என் தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் தலைவர் பி.டி.ஆர் தயானந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713897

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time