உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி அல்-அமீன் மகா வித்தியாலயத்தில்; முதலுதவிப் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு – சான்றிதழ் வழங்கி வைப்பு.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் படைப்பிரிவு நடாத்திய முதலுதவிப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, காத்தான்குடி அல்-அமீன் மகா வித்தியாலயத்தில் இன்று (03) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஐ.என்.ஏ. ஸலாம் (SLPS) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் திரு. எம்.எம். ஜவாத் (SLEAS) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் டி.எம்.எஸ். அகமது (SLEAS) மற்றும் ஏ.ஜி.எம். ஹக்கீம் (SLEAS) ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் எஸ்.எல்.எச்.எம். இனாமுல்லாஹ் கலந்துகொண்டதோடு. விஷேடமாக மாணவிகளின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709508

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time