உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பில் தொழில் கல்வியை பூர்த்தி செய்த; 32 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.!!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கி வரும் தொழில் வழிகாட்டல் நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் கணனி பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (15) மட்டக்களப்பு கிரீன் வீதியில் அமைந்துள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவனின் வழிகாட்டலில் இயங்கி வரும் இத்தொழில் பயிற்சி நிலையத்தில், கணினி பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சிகளை பூர்த்தி செய்த நான்காம் கட்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களை, மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய ஜே. எஸ். அருள்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இம்மானவர்களுக்கான கணினி பயிற்சிகளை மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரும் இப்பயிற்சி நெறியின் இணைப்பாளருமாகிய ஏ.ஆர.எம். பாஸில் வழங்கி வைத்ததுடன், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவ பயிற்சிகளை மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரான ஏ. கருணாகரன் வழங்கி வைத்துள்ளார்.

தொழில் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி கற்கை நெறிகளை தொடர முடியாத மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விசேட பயிற்சி நிலையத்தில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கற்கை நெறிகளை பூர்த்தி செய்து வெளியாகி உள்ளனர்.

இம்முறை இடம் பெற்ற நான்காம் கட்ட மாணவர்களில் 32 மாணவர்கள் கற்கை நெறிகளை பூர்த்தி செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது உதவி மாவட்ட செயலாளர் பிரிவின் பதவி நிலை உதவியாளர் கே.எம். றிழா, மனிதவள அபிவிருத்தி பிரிவின் இணைப்பாளர் டபிள்யூ. மைகல்கொலின், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ. திருவானந்தராசா, மற்றும் கற்கை நெறியினைப் பூர்திசெய்த மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706059

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time