உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல்; ஜூலை முதல் தடை.!!!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் மற்றும் 18 வயதிற்கு இடைப்பட்டவர்களை வீட்டுப்பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கண்டறிதல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் குறித்த சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறுவர் உரிமைகள் சமவாயத்திற்கமைய 18 வயதுக்குக் குறைவான அனைவரும் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒருசில சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் ஏதேனுமொரு தொழில் செய்வதற்கு உந்தப்படுவதும், தமது தாய் தந்தையுடன், மனித வியாபாரத்திற்கு இரையாகி வீதியோர சிறுவராக பெற்றோர் அல்லாதவர்களுடன் பொது இடங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பல்வேறு பொருட்கள் விற்பனையில் ஈடுபடுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714028

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time