மட்டக்களப்பு மாவட்டத்தில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த கலந்துரையாடல்.!!!
புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்டுத்துவதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் இன்று (13) பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
கிளீன் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று விடயங்களான சமூக, சுற்றாடல் , மற்றும் நெறிமுறை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கிளீன் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஐந்தான்டு வேலைத்திட்டம் தொடர்பான விரிவான தெளிவூட்டல்களும் இதன்போது வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத் திட்டங்கள் மாவட்ட செயலணியினரின் மேற்பார்வையில் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்,
வளமான நாடு அழகான தேசம் எனும் தொணிப்பொருளை அடைவதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படுத்த வேண்டிய திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


