உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி பாடசாலைகளில் சேகரிக்கப்பட்ட கல்வி உதவிகள் – கல்வி அதிகாரிகளிடம் கையளிப்பு.!!!

மட்டக்களப்பு மத்தி வலையத்திற்குட்பட்ட காத்தான்குடியில் உள்ள பாடசாலைகளில், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சேகரிக்கப்பட்ட சீருடைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று (09) உத்தியோகபூர்வமாக மத்தி கல்வி வலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

காத்தான்குடி அன்-நாசர் வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி வலைய உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். பாயிஸ், சிறுவர் விளையாட்டு இணைப்பாளர் எஸ்.எல்.எச். இனாமுல்லாஹ், ஆசிரிய ஆலோசகர் யூ.எல்.எம். பைறூஸ், முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எஸ். பசீர், சென் ஜோன் அம்பியூலன்ஸ் உதவி மாவட்ட ஆணையாளர் என்.எம்.எம். பாயிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், அல்-ஹிறா வித்தியாலயத்தைச் சேர்ந்த சென் ஜோன் அம்பியூலன்ஸ் அனர்த்த முகாமைத்துவ முதலுதவிப்படை மாணவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த செயல், பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி பயணத்தை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பாக அமையும் என கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706007

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time