கொழும்பில் மரணிக்கின்ற ஜனாஸாக்களை; வெளி மாவட்டங்களுக்கு துரிதமாக கொண்டு செல்ல – அவசர வாகன சேவைப் பிரிவு விஸ்தரிப்பு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
அகில இலங்கை ஜனாஸா அவசர வாகன சேவைப் பிரிவு மற்றும் கொழும்பு மாவட்ட ஜனாஸா நலன்புரி அமைப்புகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (01) கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கொழும்பில் மரணிக்கின்ற ஜனாஸாக்களை வெளி மாவட்டங்களுக்கு இலவசமாகவும், துரிதமாகவும் கொண்டு செல்வதெனவும், அவசர நோயினால் பாதிக்கப்படுபவர்களை வைத்தியசாலைக்கு துரிதமாக கொண்டு செல்வது சம்பந்தமான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக கொழும்பு வைத்தியசாலைகளில் கூடுதலான மரணங்கள் நிகழ்வதால் ஜனாஸா சேவைக்காக அமர்த்தப்பட்டிருக்கின்ற வாகனம் போதியளவு இல்லாத காரணத்தினால் அதனை ஓரிரு மாதங்களுக்குள் அதிகரித்து நாட்டின் சகல பாகங்களுக்கும் ஜனாஸாக்களை கொண்டு சென்று இலகுவாக கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் அகில இலங்கை ஜனாஸா அவசர வாகன சேவைப் பிரிவு தலைவர் எம்.எஸ்.எம்.ஏ.காதர், செயலாளர் எம்.எம்.எம்.றியாத், பொருளாளர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், உப பொருளாளர் என்.பி.எம்.இப்றாஹிம் ஆகியோர் கலந்து கொண்டதோடு கொழும்பு மாவட்ட ஜனாஸா அமைப்பின் தலைவர் பெளமி அவர்களும், ஏனைய ஜனாஸா அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.