சமையல் எரிவாயு விலை உயர்வு: கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதியின் விலை அதிகரிப்பு.!!!
இன்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதியின் விலைகள் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தேங்காய் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதன் பின்னணியில் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷன் தெரிவித்ததாவது, சமையல் செலவினங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் விலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.