உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர் ஈஸா அல் குரைர் உடன் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு – இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்.!!!

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டாளர் மற்றும் Essa Al Ghurair Group நிறுவனத்தின் தலைவர் ஈஸா அல் குரைர் அவர்களை, ICST பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நேற்று (22) சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில், இலங்கையின் பொருளாதார முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையின் வளர்ச்சி மற்றும் முதலீட்டிற்கு ஏற்ற சூழ்நிலைகள் குறித்து கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் விளக்கமளித்ததுடன், கல்வி, விவசாயம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் முதலீட்டு திட்டங்களை மேற்கொள்ளும் சாத்தியங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள், ஈஸா அல் குரைர் அவர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்குமாறும் கேட்டுக்கொண்டதுடன், விரைவில் இலங்கை வருமாறும் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில், Radiant Star Group of Companies நிறுவனத்தின் தலைவர் ஆபித் ஜுனைட் அவர்களும் கலந்துகொண்டார்.

— ஊடகப்பிரிவு

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709386

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time