உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வில்; கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு.!!!

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வருடாந்தம் நடைபெறும் தேசிய மீலாதுன் நபி தினம் இன்றும் (05) சிறப்பாக நடைபெற்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டம், அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மேலே கொலனி கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரூஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களின் விசேட அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஆகியோர், முஸ்லிம் சமய கலாச்சாரம் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில், மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உன்னத வாழ்வியல், மனிதகுலத்திற்கு அவர் அளித்த போதனைகள், சமாதானம், சகோதரத்துவத்தின் முக்கியத்துவம் ஆகியவை இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டன.

— ஊடகப் பிரிவு

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713884

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time