உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மாணவர்களுக்கு போதைவஸ்து விழிப்புணர்வு – பத்மநாபா அறிவியல் கழகத்தின் முன்னெடுப்பு.!!!

(ஜெ.எல்.எம். ஷாஜஹான்)

போதை வஸ்துக்கள் மீதான அறிவை பகிர்ந்து உயிர்களை காப்போம் என்னும் தொனி பொருளில், பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு நாள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மன்றசா மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறை பத்மநாபா அறிவியல் கழகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், சிறைச்சாலை அதியச்சகர் ந. பிரபாகன், அரசியல் ஆய்வாளர் மற்றும் பத்மநாபா அறிவியல் கழகத்தின் ஸ்தாபகரும் பிரான்சில் வசிப்பவருமான தோழர் சோழையூரான் (ஜோதி), மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தின் தலைவர் திரு. மாமங்கராஜா, மேலும் கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பயிற்சி நிகழ்வு, இளம் தலைமுறையினருக்கு போதைவஸ்துக்கள் ஏற்படுத்தும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706064

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time