உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

தேயிலை பைகளில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்: சந்தேக நபருக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு.!!!

-பாறுக் ஷிஹான்-

ஹெரோயின்  போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் (3 நாட்கள் ) தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கானது திங்கட்கிழமை(16)   கல்முனை நீதிமன்ற  நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில்  மன்றில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை  எதிர்வரும் மார்ச்  மாதம் (19) ஆம் திகதி  வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

செய்திப் பின்னணி: அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் பெருந்தொகை ஹெரோயின் போதைப் பொருட்களை தேயிலை பைகளில் நீண்டகாலமாக கடத்தி வந்த சந்தேக நபரை    அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும்   D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய   கைது செய்துள்ளனர்.

இதன் போது 48 வயது மதிக்கத்தக்க கைதான குறித்த சந்தேக நபர் வசம் இருந்து தேயிலை பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த ஹெரோயின் பக்கற்றுக்கள் மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின்  பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான குழுவினர்  ஈடுபட்டிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 705995

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time