கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில்; மாநாட்டு மண்டபம் திறந்து வைப்பு.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு மண்டபம் இன்று (09) காலை திறந்து வைக்கப்பட்டது.
நிறுவனத்தின் தவிசாளர் எஸ். அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஸ்மார்ட் டைம் தங்கம் மற்றும் நகை நிறுவனத்தின் உரிமையாளர் தொழிலதிபர் அம்ரோஸ் டீன் ஜெயினுல் ஆப்தீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளீதரன், ஜாமியா நளீமியா இஸ்லாமிய கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷேக் ஏ.சி. அகார் முகம்மட் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் , ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில், கொழும்பு இன்ஃபினிட்டி ஜெம்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.பி. அமீர், பெஸ்டெக் குரூப் (பிரைவேட்) லிமிடெட் தவிசாளர் ஹம்ஸா அபூசலி (ஸமிக் ஹாஜி) , அஸ்மா வூட் நிறுவனத்தின் தவிசாளர் முசாதிக் ஏ. மஜீத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாணத்திலே புற்றுநோயாளர்களை பராமரிக்கும் இந்நிலையமானது இன, மத பேதமின்றி அனைத்து நோயாளர்களுக்கும் இலவசமாக சிகிச்சை, உணவு மற்றும் பராமரிப்பு என்பவற்றை வழக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பராமரிப்பு நிலையத்திற்கான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இம் மாநாட்டு மண்டபத்தை தொழிலதிபர் அம்ரோஸ் டீன் ஜெயினுல் ஆப்தீன் மற்றும் துணைவியார் புதல்வர்கள் இணைந்து திரை நீக்கம் செய்து திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.