உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

அனர்த்த அவசர எச்சரிக்கை; 24–30 வரை கடுமையான மழை மற்றும் அதிவேக காற்று — வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை.!!!

இலங்கையின் தென் மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து, நாளை மறுநாள் (26.11.2025) ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பு முதலில் முழு இலங்கை நிலப்பகுதியூடாக நகர்ந்து பின்னர் கிழக்கு கரை அருகே நிலம்–கடல் பகுதியைத் தொடர்ந்து கடந்து, 27.11.2025 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு மாகாணத்தை அண்மித்துப் பயணம் செய்து, 30.11.2025 அன்று வடமாகாணத்திலிருந்து நீங்கி வடக்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை (25) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்த்துப் பல பகுதிகளில் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 26.11.2025 முதல் 29.11.2025 வரை — வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவா, ஊவா, வடமத்திய இவ்வனைத்துப் பகுதிகளிலும் மிகக் கனமழை ஏற்படும் சாத்தியம் அதிகம்.

26.11.2025 முதல்: கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா மாகாணங்களில் 50–70 கி.மீ/மணி வேகத்தில் பலத்த காற்று வீசும். 27.11.2025 முதல்: வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 50–70 கி.மீ/மணி காற்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு, மேற்கு, சப்ரகமுவா, மத்திய, ஊவா மாகாணங்களில் பல ஆறுகள் கொள்ளளவைத் தாண்டி பாய்ந்து வருவதால் வெள்ள அனர்த்தங்கள் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கடந்த சில நாட்களாக மண் ஈரப்பதம் நிரம்பி உள்ளதால் புதிய வெள்ள–மண் சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.

அரசுத் துறைகள், உள்ளூராட்சி மன்றங்கள், மக்களுக்கான அவசர அறிவுறுத்தல்கள்

1. அனைத்துத் திணைக்களங்களும் அவசரத் தயார் நிலைக்கு!

25.11.2025 முதல் 30.11.2025 வரை எதிர்பார்க்கப்படும் மிகப் பெரும் மழை, அதிவேக காற்று, வெள்ளப்பெருக்கு மீது உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

2. வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

குறைந்த நிலப்பகுதிகள், ஆற்றங்கரைகள், குள எதிர்பாயும் பகுதிகளில் உள்ளவர்கள் உயர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

3. ஊடகங்கள் பொறுப்புடன் தகவல் வழங்க வேண்டும்

மக்களைப் பதட்டப்படுத்தாமல், பேரிடர் சாத்தியம், பாதுகாப்பு வழிமுறைகள், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் இவற்றை துல்லியமாக பரவலாக்க வேண்டும்.

4. அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்

5. மீனவர்கள் — 25.11.2025 முதல் 30.11.2025 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

6. விவசாயிகள் — 30.11.2025 வரை உரமிடல், பூச்சி/களை நாசினி தெளித்தல் உள்ளிட்ட வேளாண் பணிகளை நிறுத்த வேண்டும்

7. அபாயகரமான சாலைகளில் பயணம் தவிர்க்கவும்

8. கிழக்கு மாகாணத்திற்கு 27, 28 ந் தேதிகளில் மிக மிக கனமழை

9. வடக்கு மாகாணத்திற்கு 28, 29 ந் தேதிகளில் மிக மிக கனமழை

10. இரு மாகாணங்களின் நிர்வாகங்கள் உடனடி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

வானிலை கணிப்புகள் மாதிரி கணக்குகள் (Modeling) அடிப்படையில் வழங்கப்படுவதால் 100% துல்லியம் இருக்கவில்லை; எனினும் தயாரிப்புடன் இருப்பது உயிர்களை காக்கும். ஆனால் அனர்த்தம் ஏற்பட்டபின் தயாராக இல்லாதிருப்பது மீளாத பாதிப்புகளைக் கொடுக்கக்கூடும்.

தொடர்ச்சியான வானிலை இற்றைப்படுத்தல்கள் வழங்கப்படும்

— நாகமுத்து பிரதீபராஜா.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709322

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time