இலங்கைக்கு அவசர எரிபொருள் உதவி: சீனா கப்பல் அனுப்ப தீர்மானம்.!!!
இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில் சீனா அவசர எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், முதலாவது கப்பல் எதிர்வரும் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு அநுர குமார திஸாநாயக்க மற்றும் சீனா தூதுவருக்கு இடையில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நடவடிக்கை இலங்கையில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடியை தற்காலிகமாக சமாளிக்க உதவும் முக்கியமான ஆதரவாக பார்க்கப்படுகிறது.