உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

July 6, 2025

Hot News

எருமை மாடு தாக்கி இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி; காத்தான்குடியில் சம்பவம்.!!!

எருமை மாடு ஒன்றின் அட்டகாசத்தால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இச் சம்பவம் நேற்று இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் காத்தான்குடி கடற்கரை பகுதியில் விரண்டு வந்த எருமை மாடு ஒன்று அங்கு நின்ற பெண் ஒருவரை குத்தி காயப்படுத்தி விட்டு, மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மிதித்து சேதப்படுத்தி உள்ளது.

அத்துடன் இந்த எருமை அப்றார் நகர் ஊடாகச் சென்று வீடு ஒன்றினுல் புகுந்து அங்கு இருந்த வயோதிப பெண் ஒருவரையும் குத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் மாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Related News

Total Websites Views

Total Views: 242080

Search

விளம்பரங்கள்