போலியான புகைப்படம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் – விசாரணை ஆரம்பம்; பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய.!!!
போலியாக வடிவமைக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலை விமான நிலையத்தில் வைத்து தலைவணங்குவது போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த புகைப்படம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.