உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கலாநிதி பட்டம் பெற்ற பலாஹிகளுக்கு – காத்தான்குடியில் சிறப்பான கௌரவிப்பு.!!!

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் பலாஹிப் பட்டம் பெற்ற வாழைச்சேனையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் எச்.எல்.எம். முஹிதீன் (பலாஹி) PhD, அல்ஹாபிழ் அஷ்ஷெய்க் எம்.எப்.எம். சிபான் (பலாஹி, அஸ்ஹரி PhD) ஆகியோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (24) புதன்கிழமை  புதிய காத்தான்குடி கல்லூரியின் மர்ஹூம் ஷைகுல் பலாஹ் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வை ஜாமிஅதுல் பலாஹ் பழைய மாணவர் அமைப்பான மஜ்லிஸுல் பலாஹிய்யீன் ஏற்பாட்டில், அதன் தலைவர் மெளலவி ஏ. அப்துல் அஸீஸ் (பலாஹி) B.A. தலைமையில் இடம்பெற்ற, நிகழ்வில் கல்லூரியின் நிர்வாகிகள், உஸ்தாதுமார்கள், மாணவர்கள், பழைய மாணவர் அமைப்பின் நிர்வாகிகள், பொதுச்சபை உறுப்பினர்கள், கௌரவம் பெற்ற பலாஹிகளின் குடும்பத்தினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கௌரவம் பெற்ற அஷ்ஷெய்க் கலாநிதி எச்.எல்.எம். முஹிதீன் (பலாஹி) அவர்கள் அரபு மொழித் துறையில் தனது கலாநிதி பட்டத்தை இந்தியா, தமிழ்நாடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024 ஆம் ஆண்டு பூர்த்தி செய்திருந்தார்.

அதேபோல், அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் கலாநிதி எம்.எப்.எம். சிபான் (பலாஹி, அஸ்ஹரி PhD) அவர்கள் எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் துறையில் தனது கலாநிதி பட்டத்தை 2024 ஆம் ஆண்டு பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709444

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time