டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி.!!!
டெல்லியின் பாலம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தின்போது கட்டிடத்திற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. உயிரிழந்தவர்களின் உடல்கள் மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இத்தீ விபத்திற்கான சரியான காரணம் இதுவரை உறுதியாக தெரியாத நிலையில், முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, சம்பவம் தொடர்பில் நீதித்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த துயரமான சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.



