உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

அனர்த்த நிவாரணத்திற்கு; மாதாந்த கொடுப்பனவை வழங்கிய – மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள்.!!!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை நடைபெறும் இந்த நிலையில், இந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் ஒருமனதாக முன்வந்துள்ளனர். எந்தவித அரசியல் வேறுபாடுகளும் இன்றி, அவர்களது டிசம்பர் மாத கொடுப்பனவுத் தொகையான ரூ.5,75,000/- ஐ நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காக வழங்கியுள்ளதாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

இதனுடன், மாநகர சபையின் உத்தியோகத்தர்களும் மனிதாபிமான அடிப்படையில் ரூ.1,60,000/- ஐ சேகரித்து நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

“இந்தப் பணியை மேற்கொள்வதற்கு மட்டக்களப்பு மாநகர சபை தான் முதன்முதலாக முன்வந்தது. அத்தோடு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து நிவாரண நிதியை வழங்குவதாக வெளிப்படையாக அறிவித்த முதல் அமைப்பு எங்களுடைய மாநகர சபை என்பதில் பெருமை கொள்கின்றோம்,” என்று முதல்வர் பாக்கியநாதன் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
“மக்களின் துயரம் கண்டு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும் இந்த நிதியை வழங்கியுள்ளனர். மாநகர சபையின் முதல்வராக நான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனவும் குறிப்பிட்டார்.

அனர்த்த நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சேகரிக்கப்பட்ட நிதி மூலம் அவசரத் தேவைகள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706012

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time