சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக; பூநொச்சிமுனை கடற்கரையை சுத்தம் செய்த காத்தான்குடி பொலிஸ் உபதேசக்குழு.!!!
(பி.எம். பயாஸ்)
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பூநொச்சிமுனை கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.பி. ரத்னாயக்க அவர்களின் தலைமையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பொறுப்பதிகாரி ஏ.எம். ஜவாஹிர் அவர்களின் நெறிப்படுத்தலிலும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உபதேசக்குழு உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உற்சாகமாக பங்கேற்றனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சமூக நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளில் பொலிஸ் உபதேசக்குழு தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.





