உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் வழக்கு – மீண்டும் ஜனவரி 28ஆம் திகதி விசாரணைக்கு.!!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது.

குறித்த வழக்கில் ஆஜராவதற்காக ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் நீதிமன்றத்திற்கு பிரவேசித்திருந்தார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

கடந்த வழக்கு தினத்தில் நீதிமன்றம் சார்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பான நபர்கள் யார், அவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அடுத்த வழக்குத் திகதியன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709377

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time