உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஹஜ் குழுவிடமிருந்து; ரூ. 5 மில்லியன் நன்கொடை – மதத் தலங்கள் மறுசீரமைப்புக்கு உதவி.!!!

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் சேதமடைந்த மதத் தலங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்காக, ஹஜ் குழுவினால் ரூ. 5 மில்லியன் நன்கொடை வழங்கப்பட்டது.

இன்று (08) முற்பகல், ஹஜ் குழு சார்பில் ரூ. 5 மில்லியன் பெறுமான நன்கொடைக் காசோலையை, புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சிடம் அதிகாரப்பூர்வமாக கையளித்தனர்.

இந்நன்கொடைக்கான காசோலையை ஹஜ் குழு தலைவர், பட்டய கணக்காளர் ரியாஸ் மிஹ்லார், புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மற்றும் மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஹஜ் குழு உறுப்பினர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த நிதி சேதமடைந்த மதத் தலங்களின் அவசர மறுசீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும், தேவைக்கேற்ப கூடுதல் ஆதரவுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709296

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time