உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் – நாளை ஆரம்பம்.!!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சைகள் நாளை (10) ஆரம்பமாகவுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2,362 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை மொத்தம் 3,40,525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 2,46,521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 94,004 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

பரீட்சை காலப்பகுதியில், உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், பரீட்சைக்கு வருகை தரும் மாணவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் சாரதி உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டுவருவது கட்டாயம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709357

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time