ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில்; மாபெரும் இலவச மருத்துவ முகாம்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
புனித ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு, காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில், பிரதேச மக்களின் மருத்துவ நலனைக் கருத்தில் கொண்டு மாபெரும் இலவச வைத்திய முகாம் நாளை (06) சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரை பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மருத்துவ முகாமில், ஊரின் புலமைமிகு 06 வைத்தியர்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதுடன், 200 நபர்களுக்கான இலவச சீனி மற்றும் குருதி அழுத்தம் (பிறசர்) பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளது.
மேலும், தேவையுடைய 150 பேருக்கு ரூ.1100 பெறுமதியான மருந்துகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
எனவே இந்த இலவச மருத்துவ முகாமில், பிரதேச மக்களை கலந்து கொண்டு பயன்பெறுமாறு பள்ளிவாயல் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

