அம்பலாந்தோட்டை – கதிர்காமம் வீதியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 4 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்.!!!
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று (18) இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், சுமார் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த மற்றொரு பேருந்தும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


