உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடியில் “மறுமலர்ச்சி நகரம்” திட்டத்தில் இடம்பெற்ற; சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நிகழ்வு.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் வளமான நாடும் – அழகான வாழ்க்கையும் எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தினம் இன்று (17) காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி றினோசா முப்லிஹ் தலைமையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் நகர சபை ஊழியர்களுக்கான வைத்திய பரிசோதனைகள், தொழு நோய், தலசீமியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்பூட்டல் கருத்தரங்குகள் மற்றும் உடற்பயிற்சி சம்பந்தமான பயிற்சிகளும் விரிவுரைகளும் துறை சார்ந்தவர்களால் வழங்கப்பட்டதோடு, காத்தான்குடி நகரசபையின் கீழ் இயங்குகின்ற முன்மாதிரி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பல் வைத்திய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நஸீர் தீன், வைத்தியர் மீரா முகைதீன், நகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மாஹிர், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பசீர், சுகாதார பரிசோதகர் ரஹ்மத்துல்லாஹ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நகரசபை ஊழியர்கள், பாலர் பாடசாவையின் ஆசிரியைகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இம்மாதம் (21) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709474

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time