உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை – மரங்கள் முறிந்து வீதிகள் முடக்கம்.!!!

மட்டக்களப்பில் நேற்று தொடக்கம் பெய்துவரும் கனமழையும் அதனுடன் இணைந்த பலத்த காற்றும் காரணமாக மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையால், மட்டக்களப்பு நகரின் பார் வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்து, வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் மின்விநியோகமும் பாதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மரத்தை வெட்டி அகற்றியதோடு, மின்சார சபை பொறுப்பதிகாரிகள் மின் இணைப்புகளையும் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கல்லடி பகுதியில் மரங்கள் முறிந்து வீதியை மறித்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இருதயபுரம், கருவேப்பங்கேணி, மாமாங்கம், கூழாவடி, புதூர், சேத்துக்குடா, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதோடு, சில வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் குடியிருப்போர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706035

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time