உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா – நாட்டின் பதில் பிரதம நீதியரசராகப் பதவியேற்பு.!!!
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா அவர்கள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் நாட்டின் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்கு திரும்பும் வரையிலான காலப்பகுதிக்குச் செயற்படும் வகையில், இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க அவர்களும் பங்கேற்றார்.
நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் ஏற்பட்ட இத்தற்காலிக மாற்றம், நீதித்துறையின் உத்தியோகபூர்வ பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.



