உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் கடும் நடவடிக்கை – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை.!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறக்காவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் அவர் இந்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், 48 மணி நேர அவகாசம் வழங்கப்படுவதுடன், அந்த பதிவை வெளியிட்ட தருணத்திலிருந்தே காலக்கெடு அமலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி மார்ச் 21 ஆம் திகதி GMT நேரப்படி இரவு 23:44 மணிக்கு இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி GMT 23:44 மணி வரை ஈரானுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த எச்சரிக்கை காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திலும் தாக்கம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713211

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time